மல்யுத்த வீரர்களின் போராட்டம் வாபஸ் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்தாகூர் பேச்சுவார்த்தை

 

- Advertisement -

பாஜக எம்பி பிரிஜ் பூசன் மீதான பாலியல் புகார் தொடர்பாக டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் 15 ஆம் தேதிவரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது டெல்லி போலீஸாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்  பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு விடுத்தார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் அழைப்பை ஏற்று மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பேச்சுவார்த்தைக்கு  சென்றனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வீரங்கனை சாக்‌ஷி மாலிக், “பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையை முடிக்க மத்திய அரசு ஜூன் 15 ஆம் தேதி வரை அவகாசம் கோரியுள்ளது. அதனால் ஜூன் 15 ஆம் தேதி வரை போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. இந்த முடிவு தற்காலிகமானது. இருப்பினும் நீதிக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை. மே 28 ஆம் தேதி மல்யுத்த வீரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லி காவல்துறை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது” என்றார்.

சிறப்புநிருபர். மு.பாண்டியராஜன்

Leave A Reply

Your email address will not be published.