ஒசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 152 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் திடீர் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் தமிழக அரசு 5,வது சிப்காட் அமைக்க. விளைநிலங்கள் உட்பட 3500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வருகிறது..
விளைநிலத்தை கொடுக்க மாட்டோம் என உத்தனப்பள்ளியில் 152, வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இனி உண்ணாவிரத போராட்டம் என அறிவித்து
திடீரென ஒசூர் – தருமபுரி சாலையில் 100 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் விவசாயம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் விளைநிலத்தை சிப்காட் தொழில் பேட்டைஅமைக்க கையகபடுத்துவது விவசாயத்தை அழிக்கும்செயலாகும் மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகிவிடும் தமிழக அரசு அதிகாரிகள் மறுபரிசீலனைசெய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கபாதுகாக்க அரசு ஆவன செய்யவேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நிருபர்.முகமதுயூனுஸ்.


