திருநெல்வேலி தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சைபர்க்ரைம் குற்றங்களைபற்றிய விழிப்பணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

 

கங்கைகொண்டான் அருகே அமைந்துள்ள தனியார் நிறுவன ஊழியர்களை நேரில் சந்தித்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன், அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதன்படி திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ப்ரிட்டானியா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் இணைய வழி முதலீடு செய்வதில் நடைபெறும் குற்றங்கள் பற்றியும், Loan App மோசடிகள் குறித்தும் Online Shopping Websites வழியாக நடைபெறும் மோசடி குறித்தும் குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ஊழியர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இணைய வழி குற்றங்களால் பொது மக்கள் பாதிக்கபட்டால் உடனடியாக இலவச தொலைபேசி எண் “1930” வழியாகவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தள வழியாகவும் பொதுமக்கள் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இணைஆசிரியர்.மதனகோபால்.

Leave A Reply

Your email address will not be published.