நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவிழாவில் கள்ளநோட்டு புளக்கத்தில் விட்ட நபர்கள் கைது காவல்குழுவினர் அதிரடி.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு காரியாபட்டினம் காவல் சரக தென்புலம் கோவில் திருவிழாவில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குற்றத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 32,320 கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் ஜெராக்ஸ் எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இது போன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரில் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் SP.அவர்களிடம் பேசுங்கள் 8428103090, என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் புகார் தருபவரின் ரகசியம் பாதுகாக்கப்படும் என நாகபட்டினம் மாவட்டகாவல்துறை SP. ஹர்ஷ்சிங் IPS தெரிவித்துள்ளார்.
சிறப்புநிருபர்.S.மணிகண்டன்.


