திருநெல்வேலி கிராம மக்களிடையே நடைபயணமாக ரோந்துச்சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய காவல்துறை

 

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய கிராம பகுதிகள் வழியாக மாவட்ட காவல் துறையினர் நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

- Advertisement -

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் கிராம பகுதிகளில் முக்கிய இடங்கள் வழியாக நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்.

Leave A Reply

Your email address will not be published.