நாகப்பட்டினம் இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்கும் 77 வயது சிங்க பெண்மணி ராமாமிர்தம் SP.ஹர்ஷ்சிங் IPS நேரில்சென்று பாராட்டு.

சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்த 77 வயதான சிங்கப் பெண்ணை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் IPS அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டு

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் வசித்து வரும் 77 வயதான ராமாமிர்தம் என்ற இவர் சிறுவர்கள், இளைஞர்கள், சிறுமிகள் என பலருக்கும் தனக்கு தெரிந்த நீச்சல் கலைகளை, நீச்சல் குளத்தில் தனக்கான ஓய்வு நேரங்களில் மற்றும் விடுமுறை நாட்களில் கற்றுக் கொடுக்கிறார். இவ்வாறு தன்னம்பிக்கையுடன் துணிச்சலுடன் செயல்பட்டு வரும் 77 வயதான மூதாட்டியின் நற்செயலை மேன்மேலும் ஊக்குவிக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் IPS அவர்கள் நேரில் அவர்களுடைய இல்லத்திற்கே சென்று பாராட்டினார்கள்.
சிறப்பு நிருபர்.மு.பாண்டியராஜன்.


