செல்போன், பணத்தை திருடியதால் ஆத்திரம்: திருச்சியில் கொத்தனாரை அடித்துக்கொன்று, காவிரியில் பிணம் வீச்சு பாலம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 5 பேர் கைது
திருச்சி மே 29 –
செல்போன் மற்றும் பணத்தை திருடியதால் திருச்சியில் கொத்தனாரை அடித்துக் கொன்று, காவிரி ஆற்றில் பிணத்தை வீசிய 5 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சக்திவேல் (வயது 35). கொத்தனார்.காவிரி பாலத்தின் அடிப்பகுதியில் தற்போது சிறு சிறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் அங்கு ஒரு தொழிலாளர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடியதாக நள்ளிரவு சுமார் 12 மணி அளவில்கொத்தனார் சக்திவேலை ஐந்து பேர் சேர்ந்து தாக்கி உள்ளனர்.
இந்த சம்பவம் திருச்சி காவிரி பாலத்திற்கு அடியில் நடந்துள்ளது.
சரமாரியாக தாக்கியதில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார் இது பற்றி தகவல் அறிந்ததும் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்மேலும் இந்த கொலையில் தொடர்புடையதாக பாலம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடலூர் மாவட்டம் வேப்பூர் என்.நாரையூரைச் சேர்ந்த சடையமுத்து மகன் வடிவேலு (வயது 29), சடையமுத்து மகன் ஐயப்பன் (வயது 31), செல்வக்குமார் மகன் ஜெயசூர்யா (வயது 21),கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த முனுசாமி மகன் திருமலை (வயது 23),கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எடசத்தூர் பகுதியைச் சேர்ந்த சாமிதுரை மகன் சரத்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர் விசாரணையில் செல்போன் மற்றும் பணத்தை திருடியதால் கொத்தனாரை அடித்துக் கொன்றதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.திருச்சி காவிரி ஆற்றில் கொத்தனாரை அடித்துக்கொன்று பிணத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைமைநிருபர் S .வேல்முருகன்