தமிழ்நாடு ஊர்க்காவல் படை 28 வது பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டி கடலூர் மாவட்ட SP.R.ராஜாராம் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில்தமிழ்நாடு ஊர்காவல்படையினருக்கான பணித்திறன் மற்றும் விளையாட்டு பொட்டி நடைபெற்றது. விழுப்புரம் சரகம் ஊர்க்காவல் படை சார்பாக கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று முதலிடம், நீளம் தாண்டுதல் போட்டியில் ஊர்க்காவல் படை வீரர் திரு. D. தினகரன் முதலிடம், கூட்டு கவாத்து போட்டியில் முதலிடம், முதலுதவி போட்டியில் முதலிடம், அலங்கார அணி வகுப்பில் முதலிடம், கயிர் இழுத்தல் போட்டியில் (மகளிர்) இரண்டாம் இடத்தையும் பெற்று விழுப்புரம் சரகம் ஊர்காவல்படைக்கு பெருமை சேர்த்தனர்.

விளையாட்டு போட்டிகளில் பங்குகேற்று கோப்பையை வென்ற ஊர்க்காவல் படையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. R. இராஜாராம் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக உதவி தளபதி திரு. கேதார்நாதன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு. அம்ஜத்கான், துணை வட்டார தளபதி திருமதி. கலாவதி ஆகியோர் உடன் இருந்தனர்.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.


