தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் விளையாட்டு போட்டி முதல்பரிசு கோல்டுகப் வென்ற தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால்ஆணி.
தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் விளையாட்டு போட்டி முதல்பரிசு கோல்டுகப் வென்ற தமிழ்நாடுஏரோஸ்கேட்டோபால் அணி.

11 ,வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி க்ஷீரடி மஹாராஷ்டிரா வில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி இரண்டு நாட்கள் மிக விமர்சையாக நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் கான அனைத்து பிரிவுகளிலும் தமிழ் நாட்டிலிருந்து திருச்சி, சிவகங்கை, நாமக்கல், அரியலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து சுமார் 60 வதுக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தேசிய அளவிலான இப்போட்டியில் மஹாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற 10 க்கும் அதிகமான மாநிலங்களிலிருந்து ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் திரளாக வந்து கலந்து கொண்டனர். அனைத்து பிரிவுகளிலும் தமிழ்நாடு மாணவ மாணவிகள் சிறப்பாக விளையாடி தேசிய அளவிலான ஒட்டு மொத்த தங்க கோப்பையை கைப்பற்றி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு ஏரோஸ்கேட்டோபால் சங்க தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் தலைமையில் சர்வதேச பயிற்சியாளர்கள் பிரவீன் ஜான்சன் மற்றும் அமல் ஜோயல் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இச்சாதனையை படைத்து தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

