திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அரசு உதவி வழக்கறிஞர்களுக்கான மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டம்

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அரசு உதவி வழக்கறிஞர்களுக்கான மாதாந்திர ஒருங்கிணைப்பு கூட்டம்

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் (19.01.2026) மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல்துறைக்கும், குற்றவியல் வழக்கு தொடர்வு துறைக்கும் (அரசு உதவி வழக்கறிஞர்கள்) இடையேயான மாதாந்திர ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

- Advertisement -

இக்கூட்டத்தில், மாநகரத்தில் உள்ள காவல்நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடித்து தக்க தண்டனை பெற்று தருவதற்க்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள் மரு.சி.மதன் இ.கா.ப.,(மேற்கு), திரு.V.வினோத் சாந்தாராம் (கிழக்கு), திரு.S.விஜயகுமார் (தலைமையிடம்), குற்றவியல் வழக்குத் தொடர்வு துறையின் துணை இயக்குநர் திரு.சேவியர் பாண்டியன், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற உதவி அரசு வழக்கறிஞர்கள், காவல் உதவி ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்.R.ஜோதிபாசு.

Leave A Reply

Your email address will not be published.