தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தகவலின் பேரில் விரைந்து சென்று மீட்ட திருநெல்வேலி மாநகர கவல்.SSI.குபேந்திரன். DC.Dr.V.பிரசன்னகுமார் IPS.பாராட்டு.
திருநெல்வேலி மாநகர சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் சேரன்மாதேவி 48,A. ஆலடிதெரு ஆறுமுகம் என்பவரின் மகள் அருள்மதி வயது 22, என்பவர் தற்கொலை செய்யப் போவதாக வந்த தகவலின் பேரில் சந்திப்பு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குபேந்திரன் அவர்கள் சென்று அருள்மொழியை நிலையம் அழைத்து வந்துள்ளார்கள்.
சந்திப்பு காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையம் வரச் சொல்லி உள்ளார்கள் மேற்கண்ட அருள்மதி அவரது உடன் பிறந்த அக்கா முல்லை அரசி என்பவரின் கணவர் மகாராஜன் (ஏசி மெக்கானிக்) என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும் இருவரும் மும்பையில் தங்கி இருந்ததாகவும் தற்போது சேரன்மாதேவியில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்கு வந்ததாகவும் குடும்பத்தில் அனைவரும் அருள்மதியை சத்தம் போட்டதால் மனம் உடைந்து ஒரு வாரத்திற்கு முன்பு மருந்து குடித்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சைபெற்றதாகவும்.
தற்போது மீண்டும் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் சென்று மருந்து குடித்து தற்கொலை செய்யப் போவதாக அருள்மதி வீட்டில் கூறிவிட்டு வந்ததால் அருள்மதியின் அக்கா முல்லையரசி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தற்கொலை மயற்சி செய்த அருள்மொழியை மீட்டு காவல்நிலையம் அழைத்து வரப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அருள்மொழியை அவர்கள் குடுமபத்தினரிடம் ஒப்டைத்த .SSI.குபேந்திரன்அவர்களை. DC.Dr.V.பிரசன்னகுமார் IPS மற்றும் AC.N.தர்ஷிகாநடராஜன் இருவரும் பாராட்டினர்.
நிருபர்.R.ஜோதிபாசு.