கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் ; எனக்கும் கடினமாகத்தான் இருந்தது -திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் IPS பேச்சு
கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் ; எனக்கும் கடினமாகத்தான் இருந்தது -திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் IPS பேச்சு
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பாவை அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர்.DIG. வருண் குமார்IPS திறந்துவைத்தார். முன்னதாக மாணவர்கள் உற்சாகமாக கைத்தட்டி பூ கொடுத்து அவரை வரவேற்றனர்.
தொடர்ந்து டி ஐ ஜி வருண்குமார் மாணவர்களிடம் பேசுகையில் :அக்கிராசனர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் நிகழ்ச்சிக்கு சென்றால் அனைவர் பெயரையும் அங்கு சொல்லாமல் அனைவரையும் வாழ்த்துவதற்கு உருவாக்கப்பட்ட வார்த்தை தான் அக்கிராசனர்.
சுறு சுறுபாக இருப்பவர்கள் முதல் பாதையில் செல்பவர்கள், சுறுசுறுப்பு இல்லை என்றால் இரண்டாம் பாதை கிடைக்கும்.
முதல் பாதைஎனக்கும் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது.படிப்பு மட்டும்தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்தது.
முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான். காசு இல்லாமல் போவான் என்பது இல்லை. அது தப்பான புரிதல்.முருங்கையில் இருக்கும் அனைத்தும் நன்மை கொண்டது.முதுமை காலத்தில் குட்சி ஊன்றி நடக்காமல்,வெறும் கையோடு நடந்து போகலாம் என்பது தான் இந்த சரியான புரிதல்.
அதே போல படிப்பை எடுத்துகொள்ள வேண்டும் என நான் கூறுகிறேன்.நண்பர்கள், பணம் இரண்டும் மகிழ்ச்சியை கொடுக்கும்.பணக்காரனுக்கும் கஷ்டம் இருக்கும், ஏழைக்கும் கஷ்டம் இருக்கும்.நல்ல நண்பர்கள் மற்றும் பணம் தான் வசதி, பைக், வீடு எல்லாமே கொடுக்கும்.
தொடர்ந்து அங்குள்ள மாணவர்களுக்கு
விளையாட்டு பொருட்களை வாங்கி தருகிறேன் என கூறி என்னென்ன வேண்டும் என கேட்டு வாங்கிதருகிறேன் என உறுதியளித்தார்.
படத்தில்,கண்ட விஷயங்களை எடுப்பாங்க, நான் பாக்குற படம் எனக்கு பிடித்த விஷயங்கள் இருக்கும் என கூறி, ஒரு கார் ரேஸ் படத்தின் கதையை மாணவர்களுக்கு கூறிவிட்டு, நாளை படத்திற்கு அழைத்து செல்வேன் என்றார்.
சகதியில் மாட்டிக்கொண்டால் போராட கூடாது உள்ளே இழுத்துவிடும், மூளையை வைத்து வெளியேற வேண்டும். நல்ல சிந்தனை, படிப்புகளை வைத்து முன்னேறுங்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை மேலாளர் முரளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணியன்.