கொடைக்கானல் வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதன் காரணத்தால் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொடைக்கானல் வனத்துறையினர் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் கொடைக்கானலில் அதிகப்படியாக சுற்றுலா தலங்கள் வனக் கட்டுப்பாட்டில் உள்ளன
இந்நிலையில் வனக் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களான குணா குகை ,பைன் மரக் காடுகள், மேயர் சதுக்கம், பில்லர் ராக், மற்றும் வன சுற்றுலா தலமான பேரிஜம் பகுதியில் இன்று யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதன்
காரணத்தால்
சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா தலங்களில் வனசரகர் திரு.பழனிகுமார் தலைமையிலான குழுவினர்யானையைவிரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் சுற்றிதிரியும் யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற பின் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று கொடைக்கானல் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக வனத்துறை சார்பாக தெரிவித்துள்ளனர்.
நிருபர்.R.குப்புசாமி.