ATM -ல் தவறவிட்ட ரூபாய் 2,10,000/- பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை பாராட்டிய திருநெலவேலி மாவட்ட SP. சிலம்பரசன்
ATM -ல் தவறவிட்ட ரூபாய் 2,10,000/- பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை பாராட்டிய திருநெலவேலிமாவட்ட .SP.சிலம்பரசன்
திருநெலவேலிமாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த அல்போன்ஸ் (22) என்பவர் 03.06.2025 அன்று ஏர்வாடியில் உள்ள IOB ATM-ல் பணம் எடுக்க சென்ற போது, அங்கு யாரோ தவறவிட்ட பணம் ரூபாய் 2,10,000/- கேட்பாரற்று இருந்துள்ளது. அந்த பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் ஏர்வாடி காவல் நிலையத்திற்கு வந்து நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஏர்வாடி காவல்துறையினர் விசாரித்த போது, அந்த பணம் நம்பிநத்தலைவன்பட்டையம், கீழத் தெருவை சேர்ந்த இசக்கி ரமேஷ் (31) என்பவருடையது என்று தெரியவந்தது. மேற்படி இசக்கி ரமேஷை ஏர்வாடி காவல் நிலையம் வரவழைத்து, உதவி ஆய்வாளர் திரு. சுடலைகண்ணு அவர்கள் இசக்கி ரமேஷ் தவறவிட்ட ரூபாய் 2,10,000/- பணத்தை உரிய முறையில் ஒப்படைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன். அவர்கள் அல்போன்ஸை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
நிருபர்.ஜோதிபாசு.