திருச்சி மாநகரில் கணாமல்போன தவறவிட்ட 13,50,000.ரூ. மதிப்பிலான 95 ஆன்டிராய்டு செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த மாநகரகாவல் ஆணையர் N. காமினி IPS.

திருச்சி மாநகரில் கணாமல்போன தவறவிட்ட 13,50,000.ரூபாய் மதிப்பிலான 95 ஆன்டிராய்டு செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த மாநகரகாவல் ஆணையர் N. காமினி IPS.

(23.04.2025)-ந்தேதி அன்று திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து பொதுமக்கள் கொடுத்த 35 மனுக்களை பெற்று, சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய தீர்வு காண அறிவுரை வழங்கப்பட்டது.

- Advertisement -

மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை விரைந்து கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
அதன்படி, பொதுமக்கள் கொடுத்த புகாரின்படி கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காணாமல் போன செல்போன்கள் பற்றிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததில் மொத்தம் 95 ,ஆன்டிராய்டு செல்போன்கள் (மதிப்பு சுமார் ரூ.13,50,000/-) கண்டுபிடித்தும், மீட்டும் அதனை (23.04.2025)-ந்தேதி திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் செல்போன்களின் உரிமையாளர்களிடம் மாநகரகாவல் ஆணையர் திருமதி.N.காமினி, IPS., அவர்கள் ஒப்படைத்தார்கள். இந்நிகழ்வின்போது காவல் ஆணையர்கள் (வடக்கு & தெற்கு), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடனிருந்தார்கள்.

தலைமைநிருபர்.மு.பாண்டியராஜன்.

Leave A Reply

Your email address will not be published.