கொடைக்கானல் பூம்பாறை மக்கள் நீண்டநாள் கோரிக்கை புறகாவல் நிலையம் திறப்பு

 

கொடைக்கானல் மேல் மலை கிராமமான பூம்பாறையில் புதிய புற காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.A.பிரதீப் IPS திறந்துவைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை கிராமங்களான பூம்பாறை, மண்ணவனுர், கிளாவரை, கவுன்சி, கூக்கால் உள்ளிட்ட15 கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.

இந்த நிலையில் இங்குள்ள கிராமங்களில் எதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இது குறித்து குறைந்தது 20 km தொலைவில் கொடைக்கானலில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து வந்தனர்.

- Advertisement -

மேலும் மலைசாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து வந்த நிலையில் மேல் மலை கிராமங்களுக்கு என தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் இன்று பூம்பாறை கிராமம் பிரதான சாலையில் புற காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்…நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்ற பட்டது. குறிப்பாக இந்த காவல் நிலையத்தில் ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர் இங்கு இருப்பதாகவும், கிராமமக்கள் அளிக்கும் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் அதிக படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கிராமம் என்பதால் 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் கஞ்சா,காளான் போன்ற போதை வஸ்துக்கள் குறித்து வாகன சோதனை செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு மட்டும் திண்டுக்கல் மாவட்ட அளவில் கஞ்சா, காளான் குறித்த 311 வழக்குகள் பதிய பட்டுள்ளதகாகவும், இது 2023 ஆண்டை விட அதிகமானது என்றும், குறைந்த அளவில் கஞ்சா வைத்திருந்தாலும் அவர்களுக்கு பெயில் கிடைக்காத அளவில் வழக்கு பதியபடும் எனவும், அதே போல போதை காளான் வைத்திருந்தால் குண்டர் சட்டம் பாயும் எனவும், கஞ்சா வழக்கில் கைதானவர்களிடம் கஞ்சா எங்கு கிடைத்தது, யார் மூலம் கிடைத்தது, என்ற கோணத்தில் அவர்களை தொடர்ந்து கண்காணித்து, தீவிர விசாரணை செய்தும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு மையத்தில் வைத்து அவர்களை போதை பழக்கங்களில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காவல் துணை கண்காணிப்பாளர்DSP.மதுமதி, காவல் ஆய்வாளர்பாஸ்கரன்,காவலர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.