கொடைக்கானல் கஞ்சாசெடி வளர்த்து விற்பனை மாணவன்கைது காவல்துறையினர்அதிரடி.

கொடைக்கானல் கஞ்சாசெடிவளர்த்துவிற்பனைசெய்ய முயன்ற மாணவன்கைது காவல்துறையினர்அதிரடி.

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கஞ்சா செடி வளர்த்து,கஞ்சா இலையை விற்பனை செய்ய முயன்ற கல்லூரி மாணவன் கைது,150 கிராம் எடையுள்ள கஞ்சா செடி பறிமுதல்

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லப்புரம் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த டேனியல் என்ற தினகரன்(19) வசித்து வருகிறான், இவன் பெரியகுளம் பகுதியில் டிப்பளமோ பயின்று வருகிறார், இந்நிலையில் விடுமுறைக்கு வரும் கல்லூரி மாணவன், இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பணி புரிந்து வருகிறார், இந்நிலையில் இந்த தனியார் விடுதி பின்புறம் பகுதியில் கஞ்சா துகள்களை தூவியதாக கூறப்படும் நிலையில், 2 கஞ்சா செடிகள் வளர்ந்துள்ளது,இதனையடுத்து பொங்கல் விடுமுறைக்கு வந்த இந்த மாணவன் இந்த விடுதியில் பணிக்கு எப்பவும் போல் வந்துள்ளார்,இந்த 2 கஞ்சா செடிகளை பறித்து காய வைத்து, விற்பனைக்காக கொடைக்கானல் நகர்ப்பகுதியை நோக்கி வந்துள்ளார்.

அப்போது பாம்பார்புரம் பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது கஞ்சா செடி இருந்தது தெரியவந்தது,இதனையடுத்து காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த போது கஞ்சா செடி வளர்த்து, விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தது தெரியவந்தது,இதனை தொடர்ந்து இந்த கல்லூரி மாணவன் மீது போதை மற்றும் மன மயக்க பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து 150 கிராம் எடையுள்ள சுமார் 4 அரை அடி உயரமுள்ள செடியையும்,இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போதை மற்றும் மன மயக்க பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுமார் 10, வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாகDSP. மதுமதி தலைமையிலான காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.