கரூர் மெடிக்கல் கடையில் பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற வழிபறிதிருடர்களை அதிரடியாக கைது செய்த கரூர் மாவட்ட காவல்துறையினர்
கரூர் மெடிக்கல் கடையில் பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற வழிபறிதிருடர்களை அதிரடியாக கைது செய்த கரூர் மாவட்ட காவல்துறையினர்.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் வட்டம் தான்தோன்றி மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மெடிக்கலில் கடந்த 21 11 24 தேதி இரவு நேரத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சி செய்த வழி பறிதிருடர்களை பிடிக்க தகவலின் பெயரில் கரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பைரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் பெயரில் கரூர் நகர DSP. திரு. செல்வராஜ் அவர்களின் அறிவுரைப்படி பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு.
சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மேலும் வழிபறி குற்றவாளிகளை பற்றி தீவிர விசாரணை செய்து வழிபறி குற்றவாளிகள் 1,ரஞ்சித் குமார் மற்றும் 2,சக்திவேல் என்கிற இருவரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இருவரும் தொடர் வழிப்பறி திருட்டில் ஈடுபட்டதும் மேலும் தற்சமயம் மெடிக்கல் கடையில் பெண்ணிடம் செயினை பறிக்க முயன்றதும் இவர்கள்தான் என்பதை தெரியவந்ததின் பேரில் இரண்டு வழிபறி திருடர்கள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்த போது காவல் துறையினரிடமிருந்து அவர்கள் தப்பித்து செல்ல முயன்ற போதுஇருசக்கரவாகனத்தில் பாலத்தில்மோதி இருவரும் கீழே விழுந்து ரஞ்சித் குமாருக்கு கையில் எலும்பு முறிவும் சக்திவேல் என்பவனுக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழிப்பறி திருட்டு தகவலின் பெயரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வழிபறிதிருடர்களை கைது செய்த பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்களின் தலைமையிலான காவல் குழுவினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பைரோஸ் கான் அப்துல்லா அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்.N.நபிமுகம்மது.