விபத்தில்உயிரிழந்தகாவலர் குடும்பத்திற்க்கு காக்கும் உறவுகள் காவலர் குழுமம்சார்பாக நிதிஉதவி

திண்டுக்கல் விபத்தில் உயிரிழந்தகாவலர்குடும்பத்திற்க்கு காக்கும்உறவுகள் காவலர் குழுமம்சார்பாக நிதிஉதவி.

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பசும்பொன் நகரை சேர்ந்த S.விக்னேஷ்குமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

- Advertisement -

கடந்த 11.05.2024 ம்தேதி பணி முடித்துவிட்டு திருச்சி ரோடு தாமரைப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த வாகனம் மோதி பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதன் காரணமாக தமிழ்நாடு காவல்துறை 2017 பேட்ச் காவலர்கள் 38, மாவட்டங்களில் காக்கும் உறவுகள் குழு என்ற பெயரில் 6587,காவலர்கள் ஒன்றிணைந்து S.விக்னேஷ்குமார் குடும்பத்தாருக்கு 21,69,900 ருபாய் பணம் வசூலித்து மனைவி,குழந்தை,
தந்தை, சகோதரி என வங்கி வைப்பு தொகையாக செலுத்தி அதற்கான வங்கி கணக்கு புத்தகத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.A.பிரதீப் IPS அவர்கள் முன்னிலையில் (22.11.2024 )ம்தேதி ஒப்படைத்தனர். மேலும் அவர் நினைவாக தென்னக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிருபர்.குருசரவணன்.

Leave A Reply

Your email address will not be published.