கொடைக்கானலில் குட்கா கூள்லீப் போதைபொருள் விற்பனை செய்தவர்கள் கைது காவல்துறையினர் அதிரடி.

கொடைக்கானலில் குட்கா கூள்லீப் போதைபொருள் விற்பனை செய்தவர்கள்கைது கடைக்கு சீல் காவல்துறையினர்அதிரடி.

கொடைக்கானலில் நள்ளிரவில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை தனியார் பேருந்தை சோதனையிட்டபோது பயணியிடம் கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கூள்லிப் பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த கடைக்கு சீல்.

திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும்… கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவதும் தொடர்ந்து கடந்த மூன்று மாத காலமாக திடீர் சோதனைகள், காட்டேஜ்களில் திடீர்
ரைடு , போதை காளான் மற்றும் கஞ்சா வைத்திருந்தவர் தொடர் கைது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் கொடைக்கானல் போலீசாரால் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வரப்படக்கூடிய நிலையில்.

- Advertisement -

3-12-24 நள்ளிரவில் கொடைக்கானலுக்கு வத்தலகுண்டு பகுதியில் இருந்து வந்த தனியார் பேருந்தை கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளர் DSP. மதுமதி தலைமையில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லாரன்ஸ் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனைகள் நடைபெற்றது ..
அப்போது வத்தலகுண்டுவிலிருந்து வந்த தனியார் பேருந்து சிட்டி வியூ பிரிவு பகுதியில் மடக்கிப் பிடித்தனர் அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்DSP. மதுமதி தலைமையில் வந்த போலீசார் பேருந்தில் சோதனையிட்டனர் அப்போது பேருந்தில் பயணம் செய்த கொடைக்கானல் உகார்தேநகர் பகுதியை சேர்ந்த காதர் ஒலி என்பவரின் பைகளை சோதனையிட்டனர் அப்போது காதர் ஓலி கொண்டு வந்திருந்த கட்ட பைகள் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கூள்லிப் பாக்கெட்டுகளை அதிகம் வைத்திருந்தால் சோதனையில் கண்டறிந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அங்கிருந்து கைப்பற்றினர்.

அப்போது உகார்தே நகர் பகுதியில் அவர் வைத்திருந்த கடையையும் முழுமையாக சோதனையிட்ட உணவு பாதுகாப்புத்துறை உணவு பாதுகாப்புத் துறையினர் மற்றும் போலீசார் குட்கா பொருட்கள் அதிக அளவில் கொண்டு வந்த காதர் ஒலியை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் காதர் ஓலி நடத்தி வந்த கடையையும் இரவோடு இரவாக சீல் வைத்தனர்.
தொடர்ந்து போதை வஸ்துகள் பயன்படுத்தக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் DSP.மதுமதி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நள்ளிரவில் பேருந்தில் சோதனை விற்று வந்த கடைக்கு சீல் உள்ளிட்டவை கொடைக்கானலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நிருபர்.R.குப்புசாமி

Leave A Reply

Your email address will not be published.