தென்காசி மாவட்டத்தில் காவல்காவல்துறையினர் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் SP.ஶ்ரீனிவாசன் தலைமை.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில் இயங்கி வரும் காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரைகளை வழங்கினார். மேலும் கடந்த மாதம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்K.அருணாச்சலம்.