கொடைக்கானல் போதைகாளான் மற்றும் போதைபொருள் விற்பனைசெய்பவர் கள் கைது DSP.மதுமதி அதிரடி நடவடிக்கை

கொடைக்கானல் போதைகாளான் மற்றும் போதைபொருள் விற்பனைசெய்பவர் கள் கைது DSP.மதுமதி அதிரடி நடவடிக்கை .

கொடைக்கானலில் விஸ்வரூபம் எடுத்த போதை காளான் சர்ச்சை*… ஒரே நாளில் போதை காளான் கேட்ட நபர்கள் உட்பட 18பேர் சிக்கினர்..
*சமூக வலைத்தளங்களில் போதை காளான் குறித்து பதிவு செய்பவர்கள் கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி எச்சரிக்கை..

திண்டுக்கல்மாவட்டம்கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்கு மட்டுமல்லாது
கொடைக்கானலில் சமீப காலமாக பல்வேறு போதைகளை ருசிப்பதற்காகவும் கொடைக்கானலை நோக்கி அதிக அளவில் இளைஞர்கள் குறிப்பாக அண்டை மாநில இளைஞர்கள் வருவது தொடர்கதை ஆகிறது குறிப்பாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப் படக்கூடிய போதை காளான் ருசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். வரக்கூடிய சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் காளான் விற்பவர்களை கொடைக்கானல் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

- Advertisement -

இருப்பினும் போதை காளான் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேல்மலை கிராம பகுதிகளில் போதை காளான் விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது. இதை அடுத்து போதை காளான் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு அதிரடி சோதனையில் கொடைக்கானல் போலீஸ் DSP. மதுமதி அவர்கள் தலைமையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கடந்த இரண்டு தினங்களாக கொடைக்கானலில் உள்ள தங்கும் வகுதிகள் ,தனியார் காட்டேஜ்கள், டென்ட் ஹவுஸ்கள், உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்தனர். இதே போல வாகன சோதனையும் செய்தனர். இதை அடுத்து கொடைக்கானலில் போதை காளான் விற்ற 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல போதை காளான் உட்கொள்வதற்காக போதை காளான் கேட்டு வந்த கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 10 சுற்றுலா பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.

இது பற்றி கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி மதுமதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில். கடந்த சில தினங்களாக விடுதிகள் மற்றும் வாகன சோதனை செய்யப்பட்டது. போதை காளான் விற்பது சம்பந்தமான சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு இது பற்றி வீடியோ வெளியிடும் நபர்களின் கணக்குகள் முடக்கப்படும். போதை காளான் அதிகமாக விளையும் வனப்பகுதிகள் கண்டறியப்பட்டு வனத்துறையினர் உடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொடைக்கானல் மேல் மலைப்பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் ஒன்று ஏற்படுத்தப்படும்.

போதை காளான் மற்றும் கஞ்சா விற்பவர்களின் கணக்குகள் முடக்கப்படும். இந்த போதைப் பொருட்கள் விற்கப்படும், மற்றும் பயன்படுத்தப்படும் விடுதிகள் அவர்கள் பயன்படுத்தக்கூடிய வாகனங்களும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த சில மாதங்களாக சுமார் 100, பேர்கள் போதை காளான் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர். காவல் துறையினர் விசாரணையின் கொடைக்கானல் பேரி பகுதியை சேர்ந்த மணி,பாண்டியராஜன் , ரகுபதி மதுரையை சேர்ந்த சூர்யா மற்றும் மகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்,தொடர்ந்து 13 பேரை 75B வழக்கு பதிவு செய்து விடுவித்தனர். போதை காளான் குறித்து தகவல்கள் பரிமாற நபர்கள் விற்கும் நபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பக்கூடிய தகவல்கள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை கடுமையாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் நகர் பகுதிகளில் திடீர் சோதனையால் கொடைக்கானல் முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.
கொடைக்கானலில் போதைபொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
DSP.மதுமதி – அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி.

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.