கொடைக்கானல் யானைதந்தம் விற்பனைக்கு வைத்திருந்த மூவர் கைது வனத்துறையினர் அதிரடி.
கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் கோடிகணக்கில் பேரம் பேசி யானை தந்தத்தை விற்க முயன்ற மூவர் கைது, யானை தந்தம் பறிமுதல் வனத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் மலைக்கிராமத்தில யானை தந்தம் ஒருவரிடம் ஒரு வருடமாக இருப்பதாகவும்,விற்பனை செய்வதற்காக முயற்சிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது,
இதன் அடிப்படையில் கடந்த 2 தினங்களாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு பிரிவினர்,திண்டுக்கல் வனப்பாதுகாப்பு பிரிவினர் மன்னவனூர் வனச்சரக பணியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்,
இந்நிலையில் அதிகாலை வேளையில் மன்னவனூர் கைகாட்டி அருகே வனத்துறையினர் வாகன சோதனை செய்ததில் வாகனத்தில் ஒரு யானை தந்தம் இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து வாகனத்தை இயக்கி வந்த மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழானவயல் பகுதியை சேர்ந்த வாகன உரிமையாளர் சந்திர சேகரையும் (ஒரு வருடமாக யானை தந்தம் வைத்து இருந்தவர்) வாகனத்தில் உடன் வந்தவர்களான பட்டி வீரன் பட்டியை சேர்ந்த முருகேசன், மற்றும் பொன்வண்ணன், உள்ளிட்ட மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கேரளாவை சேர்ந்த சிலருக்கு யானை தந்தத்தை பட்டிவீரன் பட்டியை சேர்ந்த இருவர் விற்பனை செய்ய கோடி கணக்கில் பேரம் பேசி இருப்பதாகவும், யானை தந்தத்தை பட்டிவீரன் பட்டிக்கு கொண்டு செல்ல இருந்ததாகவும் விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது,
மேலும் இவர்களிடம் இருந்த யானை தந்தமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, தொடர்ந்து இவர்களுக்கு யானை தந்தம் எப்படி கிடைத்தது, இல்லை யானை ஏதும் தந்தத்துக்காக கொல்லப்பட்டதா, இறந்து போன யானையில் இருந்து தந்தம் எடுத்தார்களா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து இந்த மூவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் வழக்கு பதிவு செய்து,மேலும் இந்த யானை தந்தம் விற்பனையில் வேறு யாரெனும் தொடர்பில் உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர்.R.குப்புசாமி.