திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல் நிலைப்பபள்ளியில் மாணவ மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி மாநகரம் கிராப்பட்டி தூய சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் விஜித்தாள் அவர்கள் தலைமையில் (08.08.24 ) நடைபெற்றது.

- Advertisement -

திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முனைவர். பிரபு அவர்கள் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்ச் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண். 10 9 8,குறித்தும் விரிவாக விழிப்புணர் வுஏற்படுத்தினார். ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் திரு.சிவா அவர்கள் கல்வியின் அவசியம் போதைப்பொருள் தடுப்பு குறித்து விரிவாக விழிப்புணர்வு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு எழுதுகோல் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு நிருபர். சே,மணிகண்டன்

Leave A Reply

Your email address will not be published.