கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் தங்கும் விடுதிகளில் நடந்த அதிரடி சோதனை..
கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் தங்கும் விடுதிகளில்நடந்த அதிரடி சோதனை..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது இங்கு வந்து செல்வது வழக்கம்,
இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள அனுமதி பெறாமல் இயங்கி வரும் தங்கும் விடுதிகளில் போதை வஸ்துக்கள் அதிகம் புழக்கத்தில் இருந்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் ,
இன்று கோட்டசியர் சிவராம் தலைமையில் காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் இந்த பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளில் சோதனை செய்த போது இதே பகுதியை சேர்ந்த பாலா 45 என்பவர் தங்கும் விடுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவை
வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் 30 கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் அங்கு வைத்திருந்ததும் தெரியவந்தது .
இதில் இங்கு தங்கி இருந்த சென்னையை சேர்ந்த 12 இளைஞர்கள், பெங்களூரை சேர்ந்த 6 இளைஞர்கள் என மொத்தம் 18 பேரை காவல்துறையினர் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த இரண்டு தங்கும் விடுதிகளும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
தொடர்ந்து இந்த விடுதியின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இது போல சுற்றுலாப் பயணிகளுக்கு போதை வஸ்துக்கள் வழங்கினால் கடுமையான நடவைக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.
இந்த சோதனையில் காவல் துறையினர், நகராட்சி அதிகாரிகள் சுற்றுலா அதிகாரிகள் வருவாய் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று மேல் மலை கிராம பகுதியாக இருக்கும் கூக்கால் , பூண்டி , மன்னவனூர் ஆகிய பகுதிகளில் சோதனை இட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர்.R.குப்புசாமி.


