திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசால் தடைசெய்யபட்ட குட்காபுகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புதுறை அதிரடி.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசால்தடைசெய்யபட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவுபாதுகாப்புதுறை, காவல்துறை அதிரடி.

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள், கார் பறிமுதல் செய்து வீட்டுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்*

- Advertisement -

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே நாகனம்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல்மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கலைவாணி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செல்வம், சரவணகுமார், ஜஸ்டின், ஜாபர்சாதிக், முருகன் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்துறை DSP முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஹக்கீம்சேட் என்பவர் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்து 300 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தப்பி ஓடிய ஹக்கீம் சேட்டை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நிருபர்.குருசரவணன்.

Leave A Reply

Your email address will not be published.