முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

 

 

.ஈரோடுமாவட்டம், சென்னம்பட்டியில் இருந்து, வெளிநாடுகள் வரை, விளையாட்டுபோட்டிகளில்  சாதனைகள் புரிந்த, கவுந்தப்பாடி காவல் நிலைய தலைமை காவலர் சரவணகுமாருடன் நேர்காணல்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம்,  சென்னம்பட்டி கிராமத்தில், விவசாய குடும்பத்தைச் சார்ந்த நல்லசாமி காமாட்சி தம்பதியருக்கு, மகனாகப் பிறந்த,   திரு. சரவணகுமார் தனது கடின உழைப்பாலும், உடற்பயிற்சியாலும், தமிழக காவல்துறையில் தேர்வாகி, இதுவரை கவுந்தப்பாடி காவல் நிலையத்தில், தலைமை காவலராக திறம்பட பணிபுரிந்து, தற்போது கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும், திரு. சரவணகுமார் அவர்கள், தற்போது தேசிய அளவில், விளையாட்டுபோட்டிகளில் பல சாதனைகள்  புரிந்து, பிறந்த மண்ணிற்கும், காவல்துறைக்கும். நாட்டிற்கும், பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

தான் கஷ்டப்பட்டு, கடந்த வந்த பாதை பற்றி, பட்டதாரியான திரு. சரவணகுமார் கூறுகையில், நான் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உடற்பயிற்சி, நண்பர்கள் உதவி மூலம், ஊட்டச்சத்து உணவு வகைகள் உட்க்கொண்டு, விளையாட்டு மற்றும் தமிழக காவல்துறையில்,  திறம்பட பணி புரிந்து வருகிறேன்… எனக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து, நான் வாழ்வில் மறக்க முடியாத, திறன் மிகுந்த நிர்மல் குமார் பயிற்சியாளரை, எனக்கு  கொடுத்து ஊக்கப்படுத்திய, எனது ஊர் கவுண்டர் தெய்வத்திரு. செந்தில்  அவர்கள், எனக்கு வாழ்க்கையில், திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

மேலும் ஆரம்பகட்டத்தில், நான் காவல்துறையில் தேர்வாகி, பணி புரிந்தபோது, பணிச்சுமை, பொருளாதாரச்சுமை, விவசாய வறட்சி சூழ்நிலை ஆகியவை காரணமாக, குடி பழக்கத்திற்க்கு ஆளாகி, சிறிது நாட்கள் வேலைக்கு செல்லாமல் இருந்தேன்…. அப்போது கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த, திரு. தங்கம் அவர்கள், எனது சூழ்நிலை அறிந்து, என்னை பெங்களூரில் உள்ள குடி மறுவாழ்வு மையத்தில் சேர்த்து, என்னை திருந்த வைத்து, எனது சாதனை பயணத்துக்கு, தூண்டுகோலாக இருந்தார்.

- Advertisement -

குடியிலிருந்து மீண்ட நான், இந்த சமூகத்திற்க்கு ஏதாவது சாதனை மற்றும்  நல்லது செய்வதற்க்காகவே, என்னை நல்லோர்கள் மற்றும் கடவுள் மீட்டு எடுத்திருக்கிறார்கள் என எண்ணி, நண்பர்கள் உதவியுடன், கவுந்தப்பாடியில் எனது மனைவி வேண்டுகோளுக்கிணங்க, மனைவி மேற்பார்வையில்,  சரவணா உடற்பயிற்சி கூடத்தை ஏற்படுத்தி, திறம்பட நடத்தி வருகிறார் எனது மனைவி… தற்போது இங்கே, விளையாட்டு திறனறிந்த, பொருளாதாரப் பின்னணி பலவீனம் அடைந்த, பல மாணவர்களை அடையாளப்படுத்தி, பயிற்சி கொடுத்து அவர்களை, இப்போது தேசிய அளவில், பல பதக்கங்களை பெற்றுத் தந்ததற்கு பெருமைப் படுகிறேன்… அவர்களில் குறிப்பிட வேண்டிய மாணவர்களான, ஹரிப்பிரியன், மகேஷ், கவின், கௌதம், மற்றும் ஹரி ராகவேந்திரா ஆகியோர்கள் ஆவர். அவர்கள் மேலும் சர்வதேச அளவில், பல சாதனைகள் புரிய தயாராக உள்ளார்கள்.

நானும் தேசிய அளவில், நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், வட்டு, குண்டு, ஈட்டி எறிதல் மற்றும் பளு தூக்குதல்  ஆகியவைகளில், கடினப் பணியான, காவல்துறை பணி புரிந்து கொண்டே, பல பதக்கங்களை பெற்று இருக்கிறேன்… மேலும் அடுத்த மாதம், தென்கொரியாவில் நடக்கும், சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ளேன்… எனக்கும், நான் பயிற்சி கொடுக்கும் மாணவர்களுக்கும், உதவி கொண்டிருக்கும், எனது சக நண்பர்களுக்கும், காவல் துறை நண்பர்களுக்கும், கவுந்தப்பாடி பிரண்ட்ஸ் அசோசியேட்ஸ் உறுப்பினர்களுக்கும், பாவேந்தன் ஸ்போர்ட்ஸ், இதயா கேஸ், சரவணன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தாருக்கும், ரோட்டரி கிளப் உறுப்பினர்களுக்கும், பவானி சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.சி .கருப்பண்ணன் மற்றும் தன்னார்வலர் செங்கோட்டுவேல், சமூக ஆர்வலர் கவுந்தி கண்ணன் குடும்பத்தாருக்கும், சென்னம்பட்டி மற்றும் கவுந்தி சுற்றுவட்டார மக்களுக்கும் நன்றிகள் பல.

மேலும் எனக்கு இன்னும் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் கொடுத்துக் கொண்டிருக்கும்,  திரு. தயாநிதி அவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர் செந்தில் மற்றும்  பள்ளி, கல்லூரி பருவ உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கும், சிறந்த ஆலோசனைகள் வழங்கி வரும் டாக்டர். கனக விஷ்ணு மூர்த்தி (உடற்கல்வி இயக்குனர்) அவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் என் கே கே பி ராஜா, திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம், கேப்டன் துரை, நல்லிசுப்பு, சர்க்கரை சதாசிவம் மற்றும் மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு முத்துசாமி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கிறார்…நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனது மூத்த மகன் முகிலன், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டதற்கு, பயிற்சி கொடுத்திருக்கிறேன்… இளைய மகன்கள் தீபன், தியானேஷ் ஆகியோர் விளையாட்டு பயிற்சியில ஆர்வமாக இருக்கிறார்கள்… எனது ஓய்வு நாட்களில் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் சென்று, மதுவின் தீமைகள் பற்றியும், நான் மதுவில் இருந்து மீண்டு, வெற்றியாளன் ஆகிய செய்தியையும்தேருவித்துவருகிறேன் . எல்லாவற்றிற்க்கும் மேலாக, நான் துவண்ட போதிலும், சோர்வாக இருக்கும் போதும், எனக்கு பலவகையில், ஊக்கமளித்துக் கொண்டிருக்கும், எனது மனைவி திருமதி. கௌசல்யா மற்றும் எனது குழந்தைகளுக்கும், உறவுகளுக்கும், தாய் தந்தையருக்கும், நன்றி கூறுகிறேன் என நினைவு கூறுகிறார்.

மேலும் எனக்கு பொருளாதார உதவி மற்றும் பயிற்சிக்காக, காவல் துறையில் தேவைப்படும் பொழுது, விடுப்பு சலுகைகள் ஆகியவை ஏற்படுத்தி தரவேண்டுமாய், தமிழக அரசு முதல்வர் அவர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்அவர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சாதனையாளர் சரவணகுமார். சரவண குமார் தொடர்பு எண்…9976121676

போலீஸ் பார்வை குழுமம் சார்பாக” வாழ்த்துக்களுடன்…

தலைமைநிருபர். Jc. கவுந்தி கண்ணன்.

Leave A Reply

Your email address will not be published.