சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.

திருநெல்வேலிமாவட்டம் சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.

திருநெல்வேலிமாவட்ட சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வேளாளர்குளம், ஆர்.சி சர்ச் அருகே செங்குளம், துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுக நயினார்(40) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது கீழே கிடந்த மணிபர்ஸை எடுத்து பார்த்தபோது, அதில் 8 கிராம் கம்மல் இருந்துள்ளது. இதனை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்தார்.

- Advertisement -

பின் மணிபர்ஸ் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த சிறுக்கன்குறிச்சி, மேட்டு தெருவை சேர்ந்த உச்சிமகாளி(45) என்பவரின் மணிபர்ஸ் என்பது தெரியவந்தது. பின் மணிபர்ஸை தவற விட்ட உச்சமாகாளியை காவல் நிலையம் வரவழைத்து.

ஆறுமுக நயினார் முன்னிலையில் உதவி ஆய்வாளர் திரு. முகைதீன் மீரான் அவர்கள் தகுந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி மணிபர்ஸை உரிய முறையில் ஒப்படைத்தார். கீழே கிடந்த மணி பர்ஸை உரிய நபரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த ஆறுமுக நயினாரின் நற்செயலை கண்ட உதவி ஆய்வாளர் அவர்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

நிருபர்.K.அருணாச்சலம்.

Leave A Reply

Your email address will not be published.