தென்காசி வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய கொள்ளை கும்பல் கைது காவல்குழுவினருக்கு IG.கண்ணன் IPS.பாராட்டு

தென்காசி வீட்டின்கதவை உடைத்து நகைகளைதிருடிய கொள்ளைகும்பல் கைது காவல்குழுவினருக்கு IG.கண்ணன் IPS.பாராட்டு.

தென்காசிமாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய குற்றவாளிகளை 24, மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டு

- Advertisement -

தென்காசிமாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் கடந்த 02.04.2024 அன்று ஆராய்ச்சி பட்டியிலுள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது வீட்டிலிருந்த 58, பவுன் தங்க நகைகள் மற்றும் 100, கிராம் வெள்ளி நகைகளை வீட்டின் கதவை உடைத்து யாரோ திருடி சென்றதாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்,

மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட பனவடலிச்சத்திரம் சொக்கலிங்கபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கார்த்திக்(28), மாடசாமி என்பவரின் மகன் குமார் @ கொம்பன் குமார்(38), சுத்தமல்லி கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் வேல்முருகன் (50) மற்றும் தேவர்குளம் செல்வராஜ் என்பவரின் மனைவி சரோஜா (37) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை 24, மணி நேரத்திற்குள் கைது செய்துநகைகளை மீட்ட காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் IG. திரு Dr.N. கண்ணன் IPS., அவர்கள் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

நிருபர்.K.அருணாச்சலம்.

Leave A Reply

Your email address will not be published.