திருவள்ளூர் மாவட்டம் நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்த இளைஞரை மீட்டு சிகிச்சை பெற செய்த திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் மனித உரிமை ஆணையம் பாராட்டு
திருவள்ளூர் மாவட்டம் நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்த இளைஞரை மீட்டுதக்க சமயத்தில் சிகிச்சை பெற செய்த திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர்தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் பாராட்டு
ADSP. திரு ஹரிக்குமார்
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகர் முதல் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் ஜெகநாதன் என்பவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு நடமாட முடியாமல் சாகும் நிலையில் எந்த ஒரு ஆதரவும் இல்லாமலும் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணையத்தின் பார்வைக்கு தகவல் வந்ததை ஒட்டி.


அவரது கோரிக்கையை ஏற்று ஆணையத்தின் புலனாய்வு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுந்தரேசன் அவர்கள் மூலம் திருவள்ளூர் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்ADSP. திரு ஹரிக்குமார் அவர்கள் பார்வைக்கு கொண்டு சென்று கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு .கே. கிரியாசக்திஅவர்கள், காவல் ஆய்வாளர் திரு. வடிவேல் முருகன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. முருகன் மற்றும் காவலர் திரு. ராஜேஷ் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆலோசனையின் பெயரில்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்ADSP.திரு. ஹரிகுமார் அவர்கள் தலைமையிலான காவல் குழுவினர் ஆதரவற்ற நிலையில் இருந்த இளைஞர் ஜெகநாதன் அவரை மீட்டெடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று துரிதமாக உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதால் தற்போது அந்த ஜெகநாதன் என்ற நபர் நலமுடன் உள்ளார் தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு சிகிச்சை பெற செய்ததால் அந்த நபர் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த சீரிய பணியை மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ADSP. ஹரிகுமார் அவர்கள் தலைமையிலான காவல் குழுவினரை காவல் கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மனிதாபிமான செயல்பாட்டிற்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது மேலும் இந்த நற்செயலினை பாராட்டி தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் நடுவர் திரு. வி. கண்ணதாசன் M.sc,M.L. அவர்கள் பாராற்று சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர்.AR.முருகேசன்.


