கடலூர் மாவட்டத்தில் 100%மக்கள் வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி மாவட்டஆட்சியர் திரு.அருண் தம்புராஜ் IAS துவக்கிவைத்தார்.

கடலூர்மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூறு சதவீத வாக்குகளை உறுதிபடுத்தி வாக்களிக்கும் விதமாக நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன் தலைமையில் பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 30 வார்டு பகுதிகளில் 18 இடங்களில் 38 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் முப்பத்தெட்டாயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் வாக்காளர்கள் 100% சதவீதம் வாக்களித்து தங்களது வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பது குறித்து நெல்லிக்குப்பம் எல்லையான ரிஜிஸ்டர் ஆபிஸ் முதல் பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. முன்னதாக நெல்லிக்குப்பம் ரிஜிஸ்டர் ஆபிஸ் அருகே அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் வளைவு ஆர்ச்-யை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு.அருண் தம்புராஜ் IAS ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் நெல்லிக்குப்பம் பிரதான சாலை வழியாக பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
பின்னர்நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்காளர் பெட்டியை திறந்து வைத்து வாக்களிப்பதின் அவசியத்தை பொதுமக்களிடம் விளக்கி பேசினார்.அதனைத் தொடர்ந்து காலையில் நடைபெற்ற வாக்களிப்பதின் அவசியத்தை உணர்த்தும் கோலப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மகளிர் குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.பின்னர் வாக்களிப்பதில் அவசியத்தை உணர்த்தும் மானாட மயிலாட கலை நிகழ்ச்சியும் மகளிர் குழுக்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்புநிருபர்.P.முத்துகுமரன்.


