பள்ளிவாகனங்களை ஓட்டிபார்த்து சரியாக உள்ளதாஎன்றுஆய்வுசெய்த திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.பா.முருகேஷ்.IAS.
கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுத படை மைதானத்தில் போக்குவரத்து துறை மூலம் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி பேருந்து வாகனங்களை மாவட்ட அளவிளான குழு ஆய்வு செய்யும்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் ,IAS அவர்கள்ஆய்வு செய்தார் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பள்ளி பேருந்து வாகனத்தை இயக்கி ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பழனி,திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆர்.மந்தாகினி ,வட்டார போக்குவரத்து அலுவலர் (திருவண்ணாமலை) திரு.சிவக்குமார் மற்றும் குழவை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிறப்பு நிருபர் இரா.சக்திவேல்.