தென்காசி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது காவல்துறையினர் அதிரடி
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்களின் உத்தரவின் பெயரில் நடைபெற்ற காவல்துறையினர்அதிரடி சோதனையில் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த. உள்ளார் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பூலித்துரை என்பவரின் மகன் காசித்துரை தலைவனார்(23), தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் முத்து கல்யாணி (22), கீழப்புதூரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் லட்சுமணகுமார் (26), ராம்குமார்(27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் கலை செல்வன்(19), மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் மீது காவல் ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 75,000 மதிப்பிலான 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நிருபர்.அருணாச்சலம்