திருச்சி சமயபுரம் காவல் நிலையம் சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழா

திருச்சி சமயபுரம் காவல் நிலையம் சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழா

சமயபுரம் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட காவலர்கள் ஒருங்கிணைந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூ எடுத்து செல்வது வழக்கம், அந்த வகையில் 29 ஆம் ஆண்டு 3வது வார பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது. சமயபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் செய்து, அங்கிருந்து யானை மரியாதையுடன், மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க, திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் தங்கள் குடும்பத்தினருடன், கூடைகளில் பூக்களை சுமந்து, தேரடி வீதி, சன்னதி வீதி வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனுக்கு பூக்களைச் சாற்றி வழிபட்டனர்.

- Advertisement -

முன்னதாக கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் மணியகாரர் பழனிவேல் ஆகியோர் மாவட்ட எஸ் பி வருண் குமாருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கோடிலிங்கம், பிரபாகரன்,
விஜயராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லால்குடி அஜய்தங்கம், திருவெறும்பூர் அறிவழகன் மற்றும் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைமைநிருபர்.S.வேல்முருகன்

Leave A Reply

Your email address will not be published.