கொடைக்கானலில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை காவல் துறையினருக்கு தங்கும் விடுதி ஏற்படுத்த கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை காவல் துறையினருக்கு தங்கும் விடுதி ஏற்படுத்த கோரிக்கை..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழக மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். தொடர்ந்து கொடைக்கானலில் அண்ணா சாலையில் காவல் நிலையம் அமைந்துள்ளது . கொடைக்கானலில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கும் கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேல்மலை கிராமங்களான மன்னவனூர் ,பூண்டி, குண்டு பட்டி, பூம்பாறை , உள்ளிட்ட கிராமங்களுக்கு கொடைக்கானலில் இருந்து காவலர்கள் செல்லும் நிலையும் இருந்து வருகிறது. இந்த சூழலில் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் சூழலில் கூடுதலாக காவல்துறையினர் நியமிக்கப்படுவர் .


மேலும் கொடைக்கானலில் ஏப்ரல் மே மாதங்களில் சீசன் நிலையில் கூடுதல் காவலர்கள் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கை காக்க நியமிக்கப்படுவர் . அவ்வாறாக நியமிக்கப்படும் காவலர்கள் தனியார் மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் மொத்தமாக இருக்கும் சூழல் உள்ளது. இதனால் அவர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்தியா முழுவதிலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .

கொடைக்கானலில் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் இருப்பர் . அவர்களுக்கு தேவையான வசதிகளும் அவ்வப்போது மட்டுமே ஏற்படுத்தப்படும். அவர்கள் பாதுகாப்பு பணிக்கு வரும் வேளையிலும் தங்கும் இடம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை மேம்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வருவாய் துறையினருக்கு சொந்தமான பல்வேறு கட்டிடங்கள் இருந்து வருகிறது .இந்த கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்து மற்றும் சமூகவிரோத கூடாரங்களாகவும் மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் வழியே பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு வரும் அரசு ஊழியர்கள் உட்பட சென்றுவர முடியாத நிலையில் இருந்து வருகிறது .
எனவே இதனை வருவாய்த் துறையினர் காவல் துறையினருக்கு வழங்கி பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவைக்கு பாதுகாப்பது இதற்கு வரும் காவலர்களுக்கு தங்கும் விடுதியாக மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
நிருபர்.R.குப்புசாமி.


