கொடைக்கானலில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் திரு தேரோட்ட விழா நடைபெற்றது

கொடைக்கானலில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் திரு தேரோட்ட விழா நடைபெற்றது, ப‌த்தாயிர‌த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தேரை இழுத்து குழந்தை வேலப்பரை சாமி தரிசனம் செய்தனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில்  பழனி தண்டாயுதபாணி கோவிலின் உபகோவிலான   3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த  குழந்தை வேலப்பர் கோவில் பூம்பாறையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது,  தினமும் சேவல்,மயில்,காளை,சிங்கம் உள்ளிட்ட வாகனத்தில்  குழந்தை வேலப்பர் இரவு நேரத்தில் உலா  வந்து காட்சியளித்தார் ,

- Advertisement -

இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நாளான இன்று கோலாகலமாக திருத்தேரோட்டம் நடைபெற்றது .இதில் குழந்தை வேலப்பர் சுவாமி வள்ளி,தெய்வானையுடன் ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதில் 50 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மலைகிராமங்களில்  நடைபெறும் தேரோட்டங்களில் குழந்தை வேலப்பர் கோவிலில் நடைபெறும் இந்த தேரோட்டம் உலகப் புகழ் பெற்றுள்ளது. தேரின் இரண்டுபுறமும்(தேரின் முன் பகுதியும்,பின் பகுதியும்) வடம் பிடித்து இழுக்கும் முறையில் அமைந்து இருப்பது தேரோட்டத்தின் சிறப்பம்சமாகும்.  இந்த தேரை வடம் பிடித்து இழுக்கும் போது  பக்தர்கள் தேரின் முன்பு  அரோகரா கோஷங்களுடன் அங்கபிரதஷ்னம் செய்தும்  1000 கணக்கான தேங்காய்களை தேரின் சக்கரத்தில் உடைத்து பாரம்பரிய முறையில் பழங்காலவாத்தியங்களை இசைத்தும் மலர்களை தூவியும்  தேர் பவனி வெகுவிமர்சையாக  நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் 10000 கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இந்த தேரோட்டத்தில் சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு குழந்தை வேலப்பரின் தேரோட்டத்தை ரசித்து
வழிபட்டனர்.இந்தியாவில்உள்ள  மலை கிராமங்களில் தேரோட்டம் பூம்பாறையில் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Reporter.R.Kupusami.

Leave A Reply

Your email address will not be published.