செல் போன்கள்திருடிஓடியவரைதுரத்திபிடித்த தலைமைகாவலர் காவல்ஆணையர் பாராட்டு.

மதுரை அரசுமருத்துவமனைவளாகத்தில் செல்போன்களை திருடி சென்று ஓடியவரை துரத்தி பிடித்த தலைமை காவலர் சரவணனுக்கு காவல் ஆணையர் Dr. J.லோகநாதன் IPS அவர்கள் பாராட்டு
மதுரைமாநகரகாவல்D1.தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் 1589. சரவணன் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது நள்ளிரவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து சந்தேகப்படியான ஒருவர் ஓடியபோது அவரை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில்,
அவர் அரசு மருத்துவமனை வளாகத்தில்செல்போன்ககளை திருடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில், அவரிடமிருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தலைமைக் காவலரின் இத்துரித செயலை பாராட்டும் விதமாக மதுரை மாநகர ஆணையர் முனைவர் . J. லோகநாதன் IPS., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து பண வெகுமதியும் கொடுத்து கௌரவித்தார்
சிறப்புநிருபர்.J.பீமராஜ்.


