விழுப்புரம் மாவட்ட காவல்துறைசார்பாக பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி.
விழுப்புரம் மாவட்ட காவல்துறைசார்பாக
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுபேரணி நடத்தப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர்SP.திரு. தீபக் சிவாச் IPS., அவர்களின் உத்தரவின் பேரில்
மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ASP.திரு. ஶ்ரீதரன் அவர்களின் மேற்பார்வையில்
விழுப்புரம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.சுரேஷ் அவர்களின் தலைமையில்
வளவனூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதேபோல் கெடார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு, CHILD HELP LINE 1098, சைபர் குற்ற தடுப்பு எண் 1930, பெண்களுக்கான உதவி எண் 181, POCSO ACT மற்றும் காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வை காவல் உதவி ஆய்வாளர் திருமதி. கலைச்செல்வி அவர்கள் ஏற்படுத்தினர்.
நிருபர்.ராமநாதன்.