இந்தியநாட்டில் 140 கோடிமக்களும் ஆரோக்கியமாக நலமுடன் வளமுடன் வாழ ராமேஸ்வரத்தில் பிரார்த்தனைசெய்தேன் என்ற பிரதமர் மோடி.

இந்தியநாட்டில் 140 கோடிமக்களும் ஆரோக்கியமாக நலமுடன் வளமுடன் வாழ ராமேஸ்வரத்தில் பிரார்த்தனைசெய்தேன் என்ற பிரதமர் மோடி.

வெறும் இளநீர்மட்டும் குடித்து கடும் விரதமிருந்து அயோத்திராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்க்காக பிரதமர்மோடி ராமர் வழிப்பட்ட ஶ்ரீரங்கநாதரரையும் இராமேஸ்வரத்தில் ஈஸ்வரனையும் முறைபடி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலையத்திலும் இராமேஸ்வரத்தில் ஈஸ்வரன் ஆலையத்திலும் முறைபடி வழிபாடுசெய்து சுவாமி தரிசனம் செய்து அயோத்தியில்இராமர் கோவில்கும்பாபிஷேகத்திற்க்கு செல்கிறார் பிரதமர் மோடி.

இந்த மனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி “வந்து ப்ராண ப்ரதிஷ்டை” செய்துவிட்டுச் சென்றிருக்கலாம். அரசியலுக்காக செய்கிறார் என்ற அனைத்து விமர்ச்சனங்களையும் தாண்டி இந்த வயதிலும் விரதம் இருந்து இராமனை இணைக்கும் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் வந்து புனித நீராடி தாம் செய்யப்போகும் இந்த செயலுக்காக தான் ஒரு நாட்டின் பிரதமர் என்பதைத் தாண்டி இவ்வளவு மெனக்கெடுகிறார் என்றால் அச்செயலின் “புனிதத்துவத்தை” முழுமையாக உணர்ந்து அதை மதித்து ஒவ்வொரு ராம பக்தர்களின் சார்பாகவே இதைச் செய்கிறார் என்று உணர முடிகிறது.

- Advertisement -

இதைக் காண்கையில் இராஜராஜ சோழன் முதலான நமது பேரரசர்கள் கோவில்களைக் கட்டி இறைவனை பிரதிஷ்டை செய்தபோது எவ்வளவு பக்தியுடன், அற்பணிப்புடன் செய்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

இராமேஸ்வரத்தில் போருக்குப் பின் அன்னை சீதையால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் உள்ளது. ஶ்ரீராமர் சீதையை மீட்க இங்கிருந்து தான் இலங்கை சென்று இராவண வதம் முடிந்த பின் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அயோத்தி திரும்பினார் என்பது நம்பிக்கை. இதுகுறித்து திருநாவுக்கரச பெருமான் பாடியதை நமது பாரத பிரதமரும் அறிந்திருக்கக் கூடுமோ?!

“வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்டரக்கன் கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன்கடற்ப டுத்துத் தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சுரத்தைக் கோரமிக் கார்த வத்தாற் கூடுவார்குறிப்பு ளாரே”

– திருநாவுக்கரசர் தேவாரம்.

பொருள் : கடலின் மீது சேதுபாலம் கட்டி, வீரமிக்க கோரைப் பற்களைக் காட்டிக் கொண்டு வானளவு உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குச் சென்று அவனை அழித்து, பேராற்றலுடைய திருமால் சிவபெருமானுக்கு கோவில் செய்து வழிபட்ட இராமேஸ்வரத்தை அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைபவர்கள் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர்.என்பதுஐதீகம்

Leave A Reply

Your email address will not be published.