கொடைக்கானல் அதிக போதைதரும் ஸ்டாம்ப் மற்றும் கஞ்சா விற்ற இருவர்கைது காவல் துறையினர் அதிரடி

கொடைக்கானல் அதிகபோதைதரும் ஸ்டாம்ப் மற்றும் கஞ்சா விற்ற இருவர்கைது காவல்துறையினர் அதிரடி.

கொடைக்கானல் மன்னவனூர் ம‌லைக் கிராமத்தில் சுற்றுலாப்பயணிகள் போல் வருகை புரிந்து விலை உயர்ந்த மற்றும் அதிக போதை தரும் ஸ்டாம்ப் மற்றும் கஞ்சா விற்பனை செய்த கேரள மாநில இளைஞர்கள் இருவர் கைது, போதை ஸ்டாம்ப்கள் ம‌ற்றும் க‌ஞ்சா ப‌றிமுத‌ல்.

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களில் போதை வஸ்து பொருட்கள் விற்பனையாவதாக எழும் புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் மலைக்கிராமங்களில் ரோந்து பணிகளிலும், வாக‌ன‌ த‌ணிக்கையிலும் ஈடுப‌ட்டு வ‌ருவ‌துட‌ன், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,

இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் கிராமத்தில் போதை வஸ்துகள் விற்பனை செய்வதாக காவ‌ல்துறையின‌ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள SP.திரு.பிரதீப் அவர்களின் உத்தரவின் பெயரில் கொடைக்கானல் காவல்ஆய்வாளர் திரு.பாஸ்டின்தினகரன் தலைமையில் காவல் துறையினர் சிறப்பு தனி படை அமைத்து மன்னவனூர் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர்,

அப்போது அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த இருவர்களை சோதனை செய்யும் போது விலை உயர்ந்த மற்றும் அதிக போதை தரும் ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஜூபின் பினு(28) ஜோயல் ஜோஸ்(27)என்பதும்,இவர்கள் இருவ‌ரும் சுற்றுலாப்பயணிகள் போல் ம‌லைக்கிராம‌த்திற்கு வருகை புரிந்து,குறிப்பாக கேரளா மாநில இளைஞர்களுக்கு போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது, மேலும் இவர்களிடம் இருந்து விலை உயர்ந்த மற்றும் அதிக போதை தரும் 10 ஸ்டாம்ப்கள் மற்றும் 250 கிராம் கஞ்சாவை பறி முதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

இந்த போதை வஸ்து பொருட்கள் விற்பனையில் வேறு யாரெனும் தொடர்பில் உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர், மேலும் மலைப்பகுதிகளில் இது போன்ற போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிட‌த்தக்க‌து.

நிருபர்.R.குப்புசாமி.

Leave A Reply

Your email address will not be published.