மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் உடைகள் வழங்கிய நெல்லை மாநகரக காவல் துறையினர்.
திருநெல்வேலி மாநகரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் உடைகள் வழங்கிய நெல்லை மாநகரக காவல் துறையினர்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திருமதி.C.மகேஸ்வரி IPS, அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையாளர் திருமதி.G.S.அனிதா அவர்கள் (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்பாடு செய்து, அவர்கள் இருப்பிடம் தேடி சென்று தேவைப்படுபவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் உடைமைகள் வழங்கி பாதுகாப்பு பணிகளை துரிதபடுத்த தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த இடமான கொக்கிரகுளம் பகுதிகள் மற்றும் உடையார்பட்டி அன்பு நகர் பகுதியில் மக்களுக்கு நேரில் சென்று தேவையான பொருட்கள் வழங்கினார்கள்.
இணைஆசிரியர்.மதனகோபால்.


