அரியலூர் மாவட்டம் அரசு வானவில் அறிவியல் கண்காட்சி போட்டியில் வென்ற மாணவனுக்கு SP.K.பைரோஸ்கான் அப்துல்லா பாராட்டு.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-வகுப்பு பயின்று வரும் மாணவர் வெ.நித்தீஷ் குமார் சென்ற ஆண்டு தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று, கிழக்கு ஆசியா நாடான தென்கொரியா-விற்கு கல்வி சுற்றுலா வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களை, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் திருமதி.ராசாத்தி, வழிகாட்டி ஆசிரியர் திரு.செங்குட்டுவன், தலைமை ஆசிரியர் திரு.தங்கையன் மற்றும் மாணவரின் தாய் திருமதி.மின்னல்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிருபர்.தங்கபாண்டியன்.


