சர்வதேச பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பீச்வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற நாகை மாவட்ட வீரர்களுக்கு SP. ஹர்ஷ்சிங் IPS பாராட்டு
சர்வதே சபிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பீச்வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற நாகைமாவட்ட வீரர்களுக்கு SP. ஹர்ஷ்சிங் IPS பாராட்டு.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் IPS அவர்கள் நேரில் அழைத்து கௌரவித்து பாராட்டினார்கள்.
தென்னாபிரிக்காவில் சர்வதேச பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான பீச் வாலிபால் போட்டியானது கடந்த 18-ந்தேதி முதல் 21- ந்தேதி வரை நடைபெற்றது. இப் போட்டியில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த 9 அணியினர் பங்கேற்றனர்.
இந்திய அணி சார்பில் நாகை நம்பியார் நகரை சேர்ந்த அபிதன் மற்றும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெடுவாகோட்டையை சேர்ந்த பூந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.
மேலும் இறுதி போட்டியில் இந்திய – ரஷ்ய அணிகள் மோதியதில் இந்திய அணி 2-ம் இடமான வெள்ளிப் பதக்கத்தை பெற்றது. சர்வதேச போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்தவிளையாட்டுவீரர்கள்திரு.அபிதன், திரு.பூந்தமிழன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பீச் வாலிபால் அணியினர் சொந்த ஊர் திரும்பினர். இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. ஹர்ஷ் சிங் IPS அவர்கள் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில் நேரில் அழைத்து சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி பாராட்டியதுடன் நம் இந்திய நாட்டிற்கு மேன்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டுமென அறிவுரை கூறினார்கள்.
தலைமைநிருபர்.Nராக்கேஷ்சுப்ரமணி.