திருவண்ணாமலை மாவட்டகாவல் துறைசார்பாக பள்ளிமாணவ மாணவிககளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் DIG.Dr. M.S. முத்துசாமி, IPS, அவர்கள் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .K.கார்த்திகேயன்,IPS, அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பது குறித்த கட்டுரைப் போட்டி, காவல்துறையுடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி காவல்துறையின் சார்பில் நடத்தப்பட்டது.


இதில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். காவல்துறை அதிகாரிகள் மாணவமாணவிகளுக்கு பாராட்டுதெரிவித்தனர்.
சிறப்பு நிருபர்.இரா.சக்திவேல்.


