திருச்சி பிரபல பிரியாணி கடைக்கு அபராதம் உணவுபாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள ஒரு பிரபல தனியார் பிரியாணி கடையில் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலம் சிக்கன் 65,பிரியாணி ஆர்டர் செய்து பெற்றார். ஆனால் அந்த உணவு கெட்டுப்போய் இருந்தது. இதையடுத்து அவர் அந்த ஓட்டலுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு முறையான பதில் அளிக்காததால், நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது சூடான உணவை பார்சல் செய்ததால் கெட்டுவிட்டது என்று கூறினர். இதனை ஏற்றுக்கொள்ளாத அவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் புகார் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அந்த ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ஓட்டலில் கெட்டுப்போன 3, கிலோ 400, கிராம் சிக்கனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.


