நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறைசார்பாக பள்ளி மாணவிகளுக்கு மகளேஉனக்காக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறைசார்பாக பள்ளிமாணவிகளுக்கு மகளேஉனக்காக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் IPS.அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு ‘மகளே உனக்காக’ என்ற தலைப்பில் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் கூட்டம் ஏற்படுத்தப்பட்டது


நாகப்பட்டினமாவட்டத்தில் பெருகிவரும் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு ‘மகளே உனக்காக’ என்ற தலைப்பில் காவல்துறையினரால் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார கூட்டநிகழ்ச்சி நடத்தப்பட்டது மேலும் மாவட்டம் முழுவதும் நடந்த இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அந்த, அந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் தலைமையில் அனைத்து பள்ளிகூடங்களிலும் நடைபெற்றது மற்றும் வெளிப்பாளையம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் IPS அவர்களின் தலைமையில் பள்ளிமாணவிகளுக்குபாதுகாப்புவிழிப்புணர்வு கூட்டம் நடந்ததில் SP.மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுரையாற்றினார்.
இணைஆசிரியர்.மதனகோபால்.


