காய்கறிகள் நடுவே மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்து பிடித்த தென்காசி மாவட்ட காவல்துறையினர்
காய்கறிகள் நடுவே மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்த நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்து பிடித்த தென்காசி மாவட்ட காவல்துறையினர்

தென்காசி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா போன்றவற்றின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.T.சாம்சன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படையினர் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில்.

காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லம் To திருமங்கலம் சாலையில் அமைந்துள்ள சிவகிரி சோதனை சாவடியில் காய்கறி மூட்டைக்குள் கஞ்சாவை நூதனமாக மறைத்து வைத்து வாகனத்தில் கடத்தி வந்த புளியங்குடி கற்பகவீதி தெருவை சேர்ந்த முருகானந்தம்(29) என்ற நபரையும், கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஷீயா பஷீர்(27) என்ற இரண்டு நபர்களையும் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர், மேலும் அவர்களிடமிருந்து இருந்து சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய Ashok Leyland dost வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றவாளிகளை திறன்பட செயல்பட்டு கைது செய்த சிவகிரி காவல் ஆய்வாளர் திருமதி. சண்முக லட்சுமி, Special Team சார்பு ஆய்வாளர் திரு. வேல்முருகன், காவலர்கள் சந்தன பாண்டியன், சுந்தர்ராஜ், கண்ணன், சையத் அலி, கருப்பசாமி, அழகுதுரை மற்றும் தனிப்பிரிவு காவலர் கருப்பசாமி ஆகியோருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.T.சாம்சன் IPS அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.
நிருபர்.அண்ணாமலை.


