திண்டுக்கல் மாவட்டம் அன்னை தெரசா மகளிர் பல்கலை கழகத்தில் மாணவிகளுக்கு தமிழக ஆளுனர்R.N. ரவி மற்றும்தமிழ்நாடு உயர்கல்விதுறை அமைச்சர். பொன்முடி முப்பதாவது பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துதெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பட்டமளிப்பு வழங்குவதற்காக தமிழக ஆளுநர் R.N. ரவிி மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வந்திருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்கலைைக்கழக இணைப்புக் கல்லூரிகள் மற்றும் கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் பயிலும் 15, 715 மாணவிகளில், 765 மாணவிகளுக்கு ஆளுநர் ரவி அவர்கள் நேரடியாக சான்றிதழ் பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் பொன்முடி மற்றும் புதுடெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மன்றம் கலைச்செல்வி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலா உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு நிறைவடைந்த உடன் அனைத்து பட்டதாரிகளும் ஆளுநர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தனர். மேலும் இந்த நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துறை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவை அடுத்து அரசு மகளில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை பார்வையிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்றும் ஆய்வு செய்து மாணவிகள் முன்னர் உறையாற்றினார்.
நிருபர்.R.குப்புசாமி.


