சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லீம் கிருஸ்துவதலைவர்கள் ஊர்வலத்தில் உள்ளவர்களுக்கு சால்வை அணிவித்து குளிர்பானங்கள் வழங்ஙகி மரியாதை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லீம் கிருஸ்துவதலைவர்கள் ஊர்வலத்தில் உள்ளவர்களுக்கு சால்வை அணிவித்து குளிர்பானங்கள் வழங்ஙகி மரியாதை மதநல்லிணக்கத்தை அன்புடன்வெளிபடுத்தினர்.

தேவகோட்டை உட்கோட்டம், தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலம்பணி ஆர்ச் பகுதியில் தொடங்கிய விநாயகர் ஊர்வலம் தேவகோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்DSP. திரு.பார்த்திபன் மேற்பார்வையில், தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் தலைமையில் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஊர்வலம் திருப்பத்தூர் ரோடு CSI சார்ச் அருகே வரும் பொழுது கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த திரு.ராஜா, வழக்கறிஞர், சகாய மாதா சர்ச் துணைத்தலைவர் மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த திரு.கமரூல் ஜமான் தீன் (ஜமாத் தலைவர்) ஆகியோர்கள் தலைமையில் மாற்று மததத்தினர் சமூக நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு சால்வை அணிவித்தும், குளிர்பானங்கள் கொடுத்தும் மரியாதை செலுத்தினார்கள்.

இச்செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளையம், வரவேற்பையும் பெற்றது.
நிருபர்.சிவகுருநாதன்.


