திருச்சியில் துரித உணவகங்களில் அதிரடி சோதனை ஜூஸ் கடைக்குசீல் உணவு பாதுகாப்புதுறை Dr.ரமேஷ்பாபு நடவடிக்கை

திருச்சியில் துரித உணவகங்களில் அதிரடிசோதனை ஜூஸ்கடைக்குசீல் உணவு பாதுகாப்புதுறை Dr.ரமேஷ்பாபு நடவடிக்கை.

திருச்சி பிரபல ஜூஸ் கடை சீல்
6 உணவகங்களுக்கு அபராதம்
140,கிலோ கெட்டுப்போன அசைவ உணவுகள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் அழிப்புஉணவுபாதுகாப்புதுறை அதிரடிநடவடிக்கை.

- Advertisement -

19.09.2023. செவ்வாய்க்கிழமை திருச்சி சாஸ்திரி ரோடு, சாலை ரோடு மற்றும் தில்லைநகர் பகுதியை சுற்றியுள்ள ஷவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் சுமார் 2, கடைகள் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு அவர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ்,செல்வராஜ், வசந்தன், இப்ராஹிம், ரெங்கநாதன், ஜஸ்டின், வடிவேல் மற்றும் அன்புச்செல்வன் கொண்ட குழுவால் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்ததில் கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி மற்றும் சமைத்த அசைவ உணவுகள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் சுமார் 140, கிலோ வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், ஒன்பது கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில் 6, கடைகளுக்கு தலா 3000, வீதம் 18000, ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது.
மேலும், ஆய்வின்போது அங்கிருந்த பிரபல ஜூஸ் கடை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது ஜூஸ் போட வைக்கப்பட்டிருந்த சுமார் 50, கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்து ஏற்கனவே இதுபோன்று கண்டறியப்பட்டு அபராத தொகை போடப்பட்டிருந்ததால் தொடர் குற்றத்தின் அடிப்படையில் அந்த கடை சீல் செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் ஷவர்மா கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றையதினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் கோழி இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதி அருகில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
என்றும் அன்புடன்
டாக்டர் R, ரமேஷ் பாபு MBBS,
மாவட்ட நியமன அலுவலர்
உணவு பாதுகாப்பு துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
94 44 04 23 22.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்.

Leave A Reply

Your email address will not be published.